திருகோணமலை மற்றும் தம்புள்ளை நகரங்களை மையமாகக் கொண்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இதன் கீழ், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுவதுடன், தனியார் முதலீட்டாளர்களும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஊக்குவிக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைய ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் வசதிகளின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இத்திட்டம் தொடர்பில் அந்த பிரதேசங்களின் உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
திருகோணமலை நகரை மையமாகக் கொண்ட இத்திட்டத்தின் கீழ் மேலும் ஆறு உப திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதோடு திருகோணமலை நகர மையக் கரையோரம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் தேவையான உட்கட்டமைப்புகள் அபிவிருத்தி செய்யப்படும்.
