திருமதி உலக அழகியான கரோலின் ஜூரி, கறுவாத்தோட்டம் பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
திருமதி இலங்கை அழகிப் போட்டியில் வெற்றிபெற்ற புஷ்பிகா டி சில்வாவால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமதி இலங்கை அழகிப் போட்டி கடந்த 4 ஆம் திகதி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றிபெற்ற புஷ்பிகா டி சில்வாவுக்கு வெற்றி மகுடம் சூட்டப்பட்டது. மறுகணமே அது மீள பறிக்கப்பட்டு, 2ஆவது வெற்றியாளருக்கு வழங்கப்பட்டது.
புஷ்பிகா டி சில்வா விவாகரத்து பெற்றவர் என்பதை அடிப்படையாகக்கொண்டே இவ்வாறு பட்டம் பறிக்கப்பட்டது. எனினும், அவர் விவாகரத்து பெற்றவர் என்பது நிருபிக்கப்படவில்ல.இதனால் மீண்டும் புஷ்பிகாவுக்கே பட்டம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.