திருமலையில் விபத்து – சிறுமி பலி – மூவர் காயம்

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட சூரங்கள் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் மற்றுமொரு சிறுமி உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

ஹஜ் பெருநாள் தினமான (29) வியாழக்கிழமை மாலை தம்பலகாமம் -அரபா நகரில் இருந்து உறவினர்களின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் தாய், தந்தை இரண்டு சிறுவர்கள் என நான்கு பேர் பயணித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள் பெட்ரோல் தாங்கியில் ஐந்து வயது சிறுமியை வைத்துக்கொண்டு பயணித்துக் கொண்டிருந்த போது சிறுமிக்கு தூக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் சிறுமி ஓரமாக சாய்ந்து உள்ளார்.

இதனையடுத்து தந்தை விழுவதற்கு முற்பட்ட போது சிறுமியை பிடித்துள்ள நிலையில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

இதேவேளை சிறுமியின் தலையில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளதாகவும், தந்தை , தாய் ஒன்றறை வயது கைக்குழந்தை ஆகியோர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு உயிரிழந்த சிறுமி தம்பலகாமம்- அரபா நகர் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவருகிறது.

உயிரிழந்த சிறுமியின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து-தொடர்பில் விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles