திருவிழாவின்போது தாலிக்கொடி கொள்ளை – ஐவர் கைது!

யாழ்ப்பாணம், நீர்வேலியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் தேர்த்திருவிழாவின்போது பெண் ஒருவரின் தாலிக்கொடியை களவாடிய சந்தேகத்தில் 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இந்தியப் பிரஜை ஒருவரும் உள்ளடங்கியுள்ளார்.

நேற்று நடைபெற்ற தேர்த்திருவிழாவின்போது தண்ணீர் பந்தலில் பானங்கள் வழங்கிக் கொண்டிருந்தபோது பெண்ணின் தாலிக்கொடி களவாடப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய சிலாபத்தைச் சேர்ந்த 26 வயது பெண், வவுனியாவைச் சேர்ந்த 37 வயதான பெண், மாத்தறையைச் சேர்ந்த 28 வயதுப் பெண் மற்றும் 49 வயதான இந்தியப் பிரஜை ஆகியோர் மக்களால் பிடிக்கப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ளவாடப்பட்ட தாலிக்கொடி மீட்கப்படாத நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles