திறப்பு விழாவுக்கு விருந்தினராக அழைக்கப்பட்ட பாகிஸ்தான் அமைச்சர், கதவுக்கு குறுக்காகக் கட்டப்பட்டிருந்த பட்டியை வெட்டுவதற்கு கத்தரிக்கோல் கஷ்டப்படுத்தியதால் தனது பற்களாலேயே கடித்து அறுத்துவிட்டு சிரித்துக்கொண்டு உள்ளே நடந்துபோகும் காணொலியொன்று இணையத்தில் வைரலாகியிருக்கிறது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில அமைச்சர் பயாஸ் அல் ஹஸன் கெஹான் என்பவரே இவ்வாறு பற்களால் வித்தை காட்டியவர் ஆவார்.