திலீபனின் நினைவிடத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அஞ்சலி

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு தனது மனைவியுடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.

சந்தோஷ் நாராயணனின் மனைவி மீனாட்சி சந்தோஷ் யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியை சேர்ந்தவர் என்பதும், எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் மாலை 4 மணிக்கு சந்தோஷ் நாராயணன் பங்கேற்கும் ‘யாழ் கானம்’ இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles