தீபாவளி திருநாளை முன்னிட்டு ஹட்டன் நகரில் சுகாதார பரிசோதகர்களால் இன்று திடீர் பரிசோதனையை முன்னெடுக்கப்பட்டது.

ஹட்டன் நகரில் உணவு பொருட்கள் விற்கப்படும் உணவகங்கள் மற்றும் மலிகை கடைகள் போன்றன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு பாவனைக்கு உட்படுத்தப்பட முடியாத உணவு பொருட்கள் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் மீட்கப்பட்டதோடு அவ்வாறு பொருட்களை வைத்திருந்த வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தகவல் : நீலமேகம் பிரசாந்த்
