தீயில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ். வடமராட்சி, நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரணவாய் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் சங்கரன் தோட்டம், கரணவாய் தெற்கைச் சேர்ந்த சிவகுரு சிவபூங்கா (வயது 48) என்ற திருமணமாகாத பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இவர் இரண்டு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ள நிலையில், வீட்டுக்கு அருகாமையில் உள்ள பனங்காணி ஒன்றில் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles