அமெரிக்காவுடன் இடம்பெற்ற வர்த்தக பேச்சுவார்த்தைகளில் இலங்கை தான் எதிர்பார்த்த இலக்கை அடைந்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூpறனார்.
44 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில் அதனை 20 சதவீதம்வரை குறைத்துக்கொள்ள முடிந்தமை வெற்றியாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
‘பிராந்தியத்தில் உள்ள போட்டியாளர்களைப் போன்ற ஒரு கட்டண விகிதத்தை அடைவதே இந்தப் பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கமாகும். இந்த இலக்கை அடைவதற்கு ஜனாதிபதி சிறந்த தலைமைத்துவத்தையும், ஆலோசனைகளையும் வழங்கினார்.
அதேபோல மத்திய வங்கி ஆளுநர், அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் மற்றும் இலங்கையின் அரச திணைக்களங்களும் உரிய பங்களிப்பை வழங்கினர்.
தீர்வை வரியை மேலும் குறைத்தக்கொள்வதற்குரிய பேச்சுகள் தொடரும்.” – எனவும் நிதி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.