துமிந்தவின் அரசியல் ஆட்டம் விரைவில் ஆரம்பம் ?

ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, குறுகியதொரு ஓய்வு காலத்தின் பின்னர் மீண்டும் செயற்பாட்டு அரசியல் நடவடிக்கையில் இறங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.

பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திர கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் சிறைக்குச்சென்று சுமார் நான்கரை வருடங்களுக்குள் ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் கடந்த 24 ஆம் திகதி விடுதலையானார்.

தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்த பின்னர், சிறிதுகால ஓய்வின் பின்னர் பிரதமரை நேற்று சந்தித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஊடாகவே, சிறைக்குச்செல்ல முன்னர் துமிந்த சில்வா அரசியல் செயற்பாட்டில் பங்கேற்றிருந்தார். தற்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளது. எனவே, மொட்டு கட்சி ஊடாகவே அவரின் அரசியல் செயற்பாடு இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, மாகாணசபைத் தேர்தலொன்று நடைபெறும் பட்சத்தில் முக்கிய பதவியில் துமிந்த சில்வா போட்டியிடக்கூடும் எனவும் சில சிங்கள இணையத்தங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Articles

Latest Articles