துருக்கி வரலாற்றில் மிகப்பெரிய நிலநடுக்கம் – 600 பேர்வரை பலி (Updates)

தென்கிழக்கு துருக்கியில் இடம்பெற்ற 7.8 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கத்தால் 500 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலர் இடிபாடுகளுக்கு நடுவே சிக்கி படுகாயமடைந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

உள்ளூர் நேரப்படி 4:17 மணிக்கு காஸியான்டெப் நகருக்கு அருகில் 17.9 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

தியார்பாகிர் உட்பட 10 நகரங்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

மேற்படி நிலநடுக்கத்தால் சிரியாவில் 50 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. பெரும் இடிபாடுகளுக்கு நடுவில் உயிர் பிழைத்திருப்பவர்களைத் தேடுவதற்கு மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

துருக்கி, சிரியா இரு நாடுகளில் மொத்தமாக நிலநடுக்கத்தால் இதுவரை 500 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது துருக்கியின் வரலாற்றில் மிகப்பெரிய நிலநடுக்கமாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related Articles

Latest Articles