மக்கள் போராட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (18) காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.
இவ் வாரத்தினுள் இடைக்கால ஜனாதிபதியை நியமிக்கும் பணி இடம்பெறவுள்ள நிலையில், போராட்ட குழுவினரால் தங்கள் நிலைப்பாட்டை எதிர்க்கட்சித் தலைவரிடம் தெரிவித்தனர்.
தானோ அல்லது தனது கட்சியோ அல்லது தனது கூட்டணியோ ஒருபோதும் போராட்டத்தின் கோரிக்கைகளுக்கு துரோகம் செய்யவில்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,எதிர்காலத்திலும் அவ்வாறு துரோகமிழைக்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார்.










