பேராதனை போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரான பெண் ஒருவரின் சடலம் கடுகன்னாவையிலுள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளது.
54 வயதுடைய வைத்தியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விசாரணையில் அவர் மருத்துவமனையின் OPD பிரிவில் பணிபுரிவது தெரியவந்தது.
மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் கடுகன்னாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










