தென்னாபிரிக்கா, இலங்கை இன்று பலப்பரீட்சை

ரி-20 உலக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 25 ஆவது போட்டியில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதவுள்ளன.

டுபாயில் நடைபெறும் இப்போட்டி இலங்கை நேரப்படி,பிற்பகல் 3.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது.

பயிற்சி ஆட்டம் மற்றும் தகுதிகாண் சுற்று போட்டிகளில் வெற்றிநடைபோட்ட இலங்கை அணி, கடைசியாக நடைபெற்ற போட்டியில் ஆஸியிடம் தோல்வி அடைந்தது.

இந்நிலையிலேயே பலம்பொருந்திய தென்னாபிரிக்கா அணியை இன்று எதிர்கொள்கின்றது.

Related Articles

Latest Articles