தென்னாப்பிரிக்காவை பந்தாடி தொடரை வென்றது இங்கிலாந்து!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ரி – 20 ஆட்டத்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ரி – 20 தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ரி 20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ரி20 ஆட்டத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி வென்றது.

இந்த நிலையில், பார்ல் நகரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்கள் எடுத்தது.

இதன்பிறகு விளையாடிய இங்கிலாந்து அணி, 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்கள் எடுத்து 2-வது டி20 ஆட்டத்தையும் டி20 தொடரையும் வென்றுள்ளது.

Related Articles

Latest Articles