தென் ஆபிரிக்காவை வீழ்த்தி ICC சூப்பர் லீக்கில் 5ஆவது இடத்தைப் பிடித்த இலங்கை

08 வருடங்களுக்குப் பின்னர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது.

 

சுற்றுலா தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை 78 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை 2-0 என்ற கணக்கில் வென்றது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்கள் முடிவில் 09 விக்கெட் இழப்புக்கு 203 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

சாரித் அசலங்கா பெற்ற 47 ஓட்டங்களே இலங்கை அணிக்காக பெறப்பட்ட அதிக ஓட்டங்களாகும்.

இதனைத்தவிர தனஞ்சய டி சில்வா 31 ஓட்டங்களையும், துஷ்மந்த சமீரா 29 ஓட்டங்களையும் பெற்றனர்.

கேசவ் மகராஜ் 38 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

204 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்கா, இலங்கை தலைமையிலான சுழற்பந்து வீச்சாளர்களால் 30 ஓவர்களில் 125 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. தென்னாப்பிரிக்காவின் முன்னணி ஆட்டக்காரரான கலாசின் 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

 

 

இலங்கை அணிக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமான மகேஷ் தீக்ஷன, 37 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுகளை வீழ்த்தினார். துஷ்மந்த சமீரா மற்றும் வனிது ஹசரங்கா ஆகியோர் தலா 02 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த போட்டியில் மகேஷ் தீக்ஷன வெளிப்படுத்திய ஆற்றல் இலங்கை பந்துவீச்சாளரின் முதல் ஒருநாள் போட்டியின் வெளிப்படுத்திய அதிகபட்ச செயல்திறன் என்று வர்ணிக்கப்படுகிறது.

முந்தைய சாதனையாக வனிடு ஹசரங்க தனது முதல் போட்டியில் சிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 15 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தென் ஆபிரிக்காவிற்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் ICC Cricket World Cup Super League தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை அணி 42 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles