தெமட்டகொடையில் டெல்டா திரிபு – மூவர் குணமடைவு!

அதிக வீரியம்கொண்ட கொரோனா டெல்டா திரிபுடன் கொழும்பு தெமட்டகொடை பகுதியில் அடையாளம் காணப்பட்ட ஐவரில் மூவர் குணமடைந்துள்ளனர் எனவும், ஏனைய இருவர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் எனவும் கொழும்பு மாநகர சபையின் தலைமை வைத்திய அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்தார்.

அத்துடன் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை இனங்காண்பதற்கு புலனாய்வு பிரிவின் உதவியும் கோரப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles