” தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் ஒழிப்புச் சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அரசாங்கம் உத்தேசித்துள்ளது.”
என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
