தெற்கு மடம்குப்புர தோட்டத்தில் 2ஆம் கட்ட நிவாரணத் திட்டம் முன்னெடுப்பு!

வட்டகொடை, தெற்கு மடம்குப்புர தோட்டத்தில் இன்று 2 ஆம் கட்ட நிவாரணப்பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 75 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
தெற்கு மடக்கும்புர தோட்டத்து இளைஞரான மகேந்ரன் ராஜேஸ்வரனின் வேண்டுகோளின் பிரகாரம், மேற்படி நிவாரணத் திட்டத்துக்கான நிதியுதவியை கொழும்பிலுள்ள வர்த்தகரான ஹட்டன், போடைஸ் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் பிரசாந்த வழங்கியுள்ளார்.
தெற்கு மடக்கும்புர ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற பூஜை வழிபாட்டின் பின்னர், ஆலய பிரதம குருக்கள் ந. லோகேந்திரன் நிவாரணத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இதற்கமைய நிவாரணத் திட்டத்தை மிகவும் நேர்த்தியாக இளைஞர்கள் முன்னெடுத்தனர். தோட்ட இளைஞர்களுக்கும், நிதி பங்களிப்பு வழங்கிய வர்த்தகருக்கும் பயன்பெற்றவர்கள் நன்றிகளைத் தெரிவித்தனர்.
மேற்படி வர்த்தகரின் நிதிப்பங்களிப்புடன் அண்மையில் தெற்கு மடம்கும்புர தோட்டத்தில் முதற்கட்ட நிவாரணத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன்பின்னர் ஹட்டன், போடைஸ் தோட்டத்திலும் 150 குடும்பங்களுக்கான நிவாரண் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

Related Articles

Latest Articles