கண்டி, கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தொட்டை ரெலிமங்கொட பகுதியில் நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பேலியகொடை மீன்சந்தைக்கு சென்றுள்ள இவர் கடந்த 21 ஆம் திகதி வீடு திரும்பியுள்ளார்.இவரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் கடந்த 28 ஆம் திகதி பெறப்பட்டது. இந்நிலையில் பிசிஆர் முடிவுகள் இன்று வெளிவந்தன.
இதில் 52 வயதான குறித்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் தெல்தெனிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடமும் பிசிஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
புபுரஸ்ஸ நிருபர் –
