தெல்தோட்டையில் பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து: மூவர் காயம்!

ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை, நூல்கந்துர பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

ஹங்குராங்கெத்த பகுதியில் இருந்து தெல்தோட்டை வரை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற தனியார் பஸ்ஸே இவ்வாறு வீதியை விட்டு விலகி, பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பஸ்ஸில் பயணித்த இரு பெண்களும், சாரதியும் காயம் அடைந்துள்ளனர். தெல்தோட்டை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இரு பெண்கள் நேற்று இரவு பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை ஹங்குராங்கெத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles