நாட்டில் தேங்காயின் விலை அதிகரித்துச் செல்லும் நிலையில் தேங்காய் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீர்மானித்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
சில தினங்களில் தேங்காய் ஒன்றின் விலை 100 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என நேற்று முன்தினம் தெங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது. அது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் வெளிவந்துள்ளன. இந்த நிலையைக் கருத்திற் கொண்டே தேங்காய்க்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதற்கு தீர்மானித்ததாக அவர் தெரிவித்தார்.
தற்போது நாட்டில் தேங்காயின் விலை 75 முதல் 80 ரூபாய் வரை காணப்படுகின்றது அந்த விலை மேலும் உயரலாம் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே தெங்கு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக டெங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அது தொடர்பில் அரசாங்கம் தமது கவனத்தை செலுத்த வேண்டும் என்றும் அந்த சங்கம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.