தேசிய அரசமைக்கும் யோசனைக்கு மலையக மக்கள் முன்னணி ஒருபோதும் ஆதரவு வழங்காது என்று அக்கட்சியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதியின் பதவிகாலத்தை ஐந்தாண்டுகளில் இருந்து ஆறாக மாற்றுவதற்குரிய திட்டங்களுக்கும் ஆதரவு வழங்கப்படமாட்டாது, அதனை கடுமையாக எதிர்ப்போம் எனவும் அவர் கூறினார்.










