” நல்லெண்ண அடிப்படையில் அரசு, தேசிய அரசொன்றை அமைக்குமானால் அதற்கு ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவு வழங்கும்.” – என்று அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் தேசிய அரசொன்றை அமைத்தால் அதற்கு எதிரணிகளின் ஒத்துழைப்பையும் பெறலாம். அவ்வாறு அமையும் தேசிய அரசுக்கு தலைமை வழங்குவதற்கு ரணில் தயாராகவே இருக்கின்றார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
” பொருளாதாரப் பிரச்சினையால் நாட்டிலுள்ள வளங்களை இந்த அரசு விற்பனை செய்துவருகின்றது. அரசு வசமுள்ள தங்க இருப்பும் குறைவடைந்துள்ளது. பொருளாதாரப் பிரச்சினைக்கான தீர்வுகள் இவை அல்ல. உரிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அதற்கான யோசனைகள் ஐக்கிய தேசியக்கட்சி வசம் உள்ளன. ” – என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
