தேசிய பொங்கல் விழா மலையகத்தில் – ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு!

தேசிய பொங்கல் விழாவை இம்முறை மலையகத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் , ஹட்டன் டன்பார்க் மைதானத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதி தேசிய பொங்கல் விழா மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் பிரதம அதிதிகளாக பங்கேற்கவுள்ளனர்.

கலை, கலாசார நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 

Related Articles

Latest Articles