இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.
அரசியல் ரீதியில் ஏற்பட்டுள்ள வங்குரோத்து நிலையால் அல்ல, மக்கள் ஆணையால் தெரிவுசெய்யப்பட்டுள்ள புதிய அரசுக்கு வழிவிடும் நோக்கிலேயே இம்முடிவை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், ராஜபக்ச குடும்பம் நாட்டைவிட்டு வெளியேறுவதே நல்லது எனவும், ஹர்ஷ டி சில்வா போன்றவர்கள்தான் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப்பதவிக்கு வரவேண்டும் எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, “பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மைபலம் கிடைத்தால்கூட பரவாயில்லை. இது சிங்கள, பௌத்த நாடு, இதனை எவரும் சீண்ட முற்பட்டால் அதற்கு எதிராக நான் பொங்கியெழுவேன். இதற்கு நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.” – எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.










