தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தலுக்கான விஞ்ஞாபனம் எதிர்வரும் 26 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.
இந்த தகவலை அக்கட்சியின் தலைவரான ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனமும் மாத இறுதிக்குள் முன்வைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனமும் இறுதிப்படுத்தப்பட்டுவருகின்றது.










