அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் பெண்ணொருவரே பிரதமராக நியமிக்கப்படுவார் – என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க நிச்சயம் வெற்றிபெறுவார். இது 2019 இல் உருவான ஆதரவு அலைபோன்றது அல்ல. இது மக்கள் நம்பிக்கையாகும். எனவே, வெற்றி உறுதி.
3 சதவீத வாக்குகளே எங்களுக்கு உள்ளது என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அது தற்போது 50 வீதத்தை தாண்டியுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் கூட்டங்களில் பங்கேற்காதவர்கள்கூட நிச்சயம் வாக்களிப்பார்கள்.
எமது நாட்டு சனத்தொகையில் பெரும்பாலானவர்கள் பெண்கள். எனவே, தேசிய மக்கள் சக்தியின் பிரதமர் பெண்ணொருவராக இருக்ககூடும். பெண் தலைவியொருவர் பிரதமராக வேண்டும் என்பதே எமது நாட்டு பெண்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.” – என்றார்.










