மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா போதாது, அவர்களுக்கு 2 ஆயிரத்து 200 ரூபா வழங்கப்பட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கொட்டகலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
“தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பான சட்டமூலமே நாடாளுமன்றத்துக்கு அவசரமாக கொண்டுவரப்பட வேண்டும். அதனை செய்யாமல் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை கொண்டுவருவதற்கு ஜனாதிபதி முற்படுகின்றார்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் மலையக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும். அவர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்படுவார்கள்.” – என்றார்.
எஸ். சதீஸ்