தேசிய மட்ட பரீட்சைகளில் வெற்றிநடைபோடும் கொத்/ஹெல்பொட வடக்கு தமிழ் வித்தியாலயம்!

கொத்மலை கல்வி வலயத்தில் மிகவும் கஷ்ட பிரதேச பாடசாலையான கொத்/ஹெல்பொட வடக்கு தமிழ் வித்தியாலயம் தேசிய மட்ட பரீட்சைகளில் அண்மைக்காலமாக சிறந்த பெறுபேறுகளை பெற்றுவருகின்றது.

ஆளணி மற்றும் பௌதீக வளப்பற்றாக்குறைகளுக்கு மத்தியிலும் அதிபர் கே. தேவராஜ் மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு காரணமாக கல்வித்துறையில் அப்பாடசாலை பிரகாசித்துவருகின்றது.

குறிப்பாக 2023 புலமைப்பரிசில் பரீட்சைக்கு 17 மாணவர்கள் தோற்றிய நிலையில் நான்கு மாணவர்கள் வெட்டுபுள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்து, பாடசாலைக்கு பெருமை சேர்த்தனர்.

L. டினுஷான் 172
R. பிரத்தமி 164
J. கௌதமி 150
R. ரோஜாமோழி 147

அத்துடன், 13 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களின் வெற்றிகரமாக நெறிப்படுத்திய ஆசிரியர் A. வசந்தியை பாராட்டியே ஆக வேண்டும்.

அதேவேளை, 2022(2023) க பொ த (சா /த ) பரீட்சையிலும் இப்பாடசாலை சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

10 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 9 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர். சித்தி விகிதம் 90%

ஆர். ஜெயந்தினி என்ற மாணவி 7A – 1B – 1C பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

தமிழ் – 100%
கணிதம் – 90%
வரலாறு – 90%
சித்திரம் – 100%
புவியியல் – 100%
குடிரிமை கல்வி – 100%
சமயம் – 90%
ஆங்கிலம் – 70%
விவசாயமும் உணவு தொழிநுட்பவியலும் 100%
சுகாதாரம் – 80%
விஞ்ஞானம் – 40%

மாணவர்களுக்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும் நன்றிகள் .

அதேபோல வலய, மாகாண மற்றும் தேசிய மட்ட போட்டிகளிலும் பங்கேற்று மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்திவருகின்றனர்.

ஹெல்பொட பகுதியென்பது மிகவும் பின்தங்கிய பகுதியாகும். உரிய நேரத்துக்கு பாடசாலைக்கு செல்வதற்குகூட போக்குவரத்து இல்லை. திரும்ப வரவும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும்.

இப்பாடசாலையின் அதிபர் கே. தேவராஜ் சிறந்த தலைமைத்துவ பண்பு கொண்டவர். கல்வியே சமூக புரட்சிக்கான – வளர்ச்சிக்கான வழியெனக் கருதி, மாணவர்களுக்கு கல்வி அமுது ஊட்டிவரும் – அதற்காக தலைமைத்துவம் வழங்கிவரும் சிறந்த நபராவார். அயரி தமிழ் வித்தியாலயத்தில் கற்பித்தபோதும் அங்கும் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.

Related Articles

Latest Articles