தேசிய வளங்கள் விற்கப்படுவது குறித்து எதிரணிகள் ஏன் மௌனம்?

“தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்ட தேசிய வளங்கள் விற்பனை செய்யப்படுவதை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். மக்கள் தூங்கிக்கொண்டுள்ளனர் என ஆட்சியாளர்கள் நினைக்க கூடாது. அநீதிக்கு எதிராக நாம் நிச்சயம் கிளர்ந்தெழுவோம்”

இவ்வாறு தேசிய வளங்களை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் முக்கியஸ்தரான எல்லே குணவங்க தேரர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ தேசிய வளங்கள் விற்கப்பட்டுவருகின்றன. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படுவதற்கு நாம் எதிர்ப்பு இல்லை. ஆனால் தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்ட டெலிகோம், மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட நிறுவனங்கள் விற்கப்படுவதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சியை கடுமையாக எதிர்க்கின்றோம். மக்களை பணயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட வேண்டாம் என அரசுக்கு கூறிவைக்க விரும்புகின்றேன்.

நாடு குறித்து நாம் விழிப்பாகவே இருக்கின்றோம். தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் நீதிகோரி, அநீதிக்கு எதிராக எழுவோம் என்பதை அரசுக்கும், ஏனைய கட்சிகளுக்கும் கூறிவைக்க விரும்புகின்றோம். தேசிய வளங்கள் விற்கப்படுவதை எதிரணிகள் ஏன் எதிர்க்கவில்லை என்பது தெரியவில்லை. நாம் தற்போது மௌனம் காக்கின்றோம். உரிய நேரத்தில் எழுவோம்.

ஆட்சியாளர்களுக்கு சந்தர்ப்பம் வருவதுபோல, மக்களுக்கும் வரும். எனவே, உரிய வகையில் அந்த சந்தர்ப்பம் பயன்படுத்தப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles