இலங்கை தேசிய வாள் சண்டை விளையாட்டின் நடுவராக (srilanka Netanal Fencing refree) இரஜவலை இந்து தேசிய கல்லூரியின் (2008’AL) பழைய மாணவர் M தயானந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
கடந்த வாரம் திகன மகாவலி உள்ளக விளையாட்டறங்கில், அகில இலங்கை ரீதியில் நடைப்பெற்ற, பாடசாலைகளுக்கிடையிலான வாள் சண்டை போட்டியில் இவர் நடுவராக செயல்பட்டார்.
இதன் போது நடுவருக்கான நியமன பத்திரம் M. தயானந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவர் வாள் சண்டை விளையாட்டை 2014ஆம் ஆண்டு MAS இல் விளையாட ஆரம்பித்தார். மத்திய மாகாண அணிக்காகவும் தேசிய அணிக்காகவும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2016 ஆம் ஆண்டு,
அகில இலங்கை ரீதியில் நடைப்பெற்ற வாள் சண்டை போட்டியில் மத்திய மாகாணம் முதலிடத்தினை பெற்றுக்கொண்டது.
இதில் தயானந்தன் தங்கப்பதக்கத்தினை சுவீகரித்ததுடன்,
அந்த அணியினுடைய தலைவராகவும் செயற்பட்டார்.
மேலும் இவர் தேசிய வாள் சண்டை பயிற்றுவிப்பாளர்( fencing cooch) என்பதோடு. கராத்தே நடுவர் (karate refree) என்பதும் குறிப்பிடத்தக்கது.