கடந்த பல மாதங்களாக இருந்து தேயிலை ஏற்றுமதி சுமார் 20 சதவீதம் குறைந்துள்ளதுடன், தேயிலையை ஏலம் டொலரில் நடத்துவது நடைமுறைக்கு சாத்தியம் அல்லது என தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் கூறியது.

தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் இது பற்றி கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது:
உரப்பிரச்சினை காரணமாக தேயிலை உற்பத்தி கணிசமானளவு குறைந்துள்ளமையே இதற்குக் காரணம்.
தேயிலை ஏற்றுமதியில் ஏற்றுமதியாளர்களுக்கு பணம் செலுத்த வாங்குபவர்களுக்கு 180 நாட்கள் உள்ளன. ஆனால், தேயிலை ஏலத்தில் ஏற்றுமதியாளர்கள் தேயிலையைப் பெற்றால், வியாபாரிகளுக்குக் கட்டனம் செலுத்துவதற்கு ஒரு வாரம் மட்டுமே உள்ளது.
மேலும், பல சேவை வழங்குனர்களுக்கு ெடாலரில் பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். தேயிலை ஏலத்தை டொலரில் நடத்தினால், பணம் செலுத்துவதற்கு தேவையான டொலர்களை பெறுவது கடினமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
நாட்டுக்கு அதிக டொலர்களை வரவழைக்கும் வகையில் தேயிலை ஏலத்தை டொலரில் நடாத்தாமல் தேயிலை உற்பத்தியை அதிகரிக்க வசதி செய்ய வேண்டும்.
உள்ளூர் தேயிலை ஏலத்தில் சுமார் 300 தேயிலை ஏற்றுமதியாளர்கள் பங்கேற்கின்றனர். வாரத்தின் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஏலம் நடைபெறும். நாட்டின் தேயிலை உற்பத்தியில் 80 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
உலக அளவில் கிட்டத்தட்ட 40 நாடுகளுக்கு இலங்கையில் இருந்து தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தேயிலை ஏற்றுமதி தொடர்ந்து வெற்றிபெற வேண்டுமானால், அதிகாரிகள் உரிய நேரத்தில் இத்தகைய மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
