தேயிலை தூளில் கலப்படம்

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை சாதகமாகப் பயன்படுத்தி கலப்படம் செய்யப்பட்ட தேயிலைத் தூள் சந்தையில் விற்கப்படுவதாக முறைப்பாடு தெரிவிக்கப்படுகிறது.

தேயிலை கழிவுகளை அரைத்து சுண்ணாம்பு கலத்தல் மற்றும் தேயிலை தூளுக்கு சீனி கலந்து இவ்வாறு கலப்படம் செய்வதாக துறைசார்ந்த அனுபவம் பெற்ற நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

தேயிலைத் தூள் உற்பத்தியாவதற்கு முன் தேயிலை கொழுந்து பதப்படுத்தப்படும் போது தேயிலைத் தூளை அதிகமாகவும் கறுப்பு நிறமாக மாற்றுவதற்காகவே இந்த கலப்பட முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று தேயிலைத் தூளின் சாயத்தை அதிகரிப்பதற்காக சுண்ணாம்பு கலக்கப்படுவதாகவும் இதனால் தேயிலைத்தூளில் அதிக சாயம் கிடைப்பதாகவும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனால் நுகர்வோர் நோய் சுகாதார சீர்கேடுகளுக்கு முகங் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படக்கூடும் என தெரிவிக்கின்றனர். இவ்வாறான தொழிற்சாலைகளை இனங்கண்டு அவற்றுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles