தேயிலை தோட்ட உரிமையாளர் சுட்டுக்கொலை!

கொலன்ன – கேல்ல பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நேற்றிரவு 2024.07.09. இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கேல்ல – இறக்குவானை பிரதான வீதியில் இந்த துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது.

தேயிலை தோட்ட உரிமையாளரான 61 வயதுடைய நபர் ஒருவரே இந்த துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடாத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொலன்ன பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

எம்.எப்.எம். அலி

Related Articles

Latest Articles