ஜப்பானுக்கான தனது அடுத்த விஜயத்தின் போது தேரவாத பௌத்தம் தொடர்பில் ஆராய்வதற்கான பல்கலைக்கழகம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு அவசியமான உதவிகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இன்று காலை அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர்களை சந்தித்த போது ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டார்.
