தேர்தல் நடவடிக்கைகளுக்காக விசேட குழுவொன்றை அமைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.
தேர்தலுக்கான கூட்டணி, இட ஒதுக்கீடுகள் உள்ளிட்ட விவகாரங்களை இந்த குழுவே கையாளும் எனவும், இதர கட்சிகளுடன் பேச்சு நடத்தும் எனவும் தெரியவருகின்றது.
2024 ஆம் ஆண்டு தேர்தல் வருடமாக கருதப்படுகின்றது. அரசமைப்பின் பிரகாரம் 2024 ஒக்டோபர் மாதத்துக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். 2025 வரை நாடாளுமன்றத்தின் பதவி காலம் இருந்தாலும், அதனை முன்கூட்டியே கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.
இதற்கிடையில் பாதீடு நிறைவேறிய பின்னர் பொதுத்தேர்தலை நடத்த ஜனாதிபதி உத்தேசித்துள்ளார் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே தேர்தலை எதிர்கொள்வதற்கு பிரதான எதிர்க்கட்சி தயாராகிவருகின்றது.
அதேவேளை அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் மாவட்ட மட்டத்திலான கூட்டங்களை நடத்திவருகின்றது.
