” தேர்தலை ஒத்திவைக்க மற்றுமொரு சதி” – மைத்திரி பகீர் தகவல்!

” ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது, இது பாரியதொரு மோசடி நடவடிக்கையாகும்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தற்போதுள்ள ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு சர்வஜன வாக்கெடுப்பை நடத்திவிட்டு, நாடாளுமன்றம் ஊடாக ஜனாதிபதியை தெரிவுசெய்ய முயற்சி எடுக்கப்படுகின்றது என தெரியவருகின்றது.

நாடாளுமன்றம் ஊடாக ஜனாதிபதியை தெரிவு செய்வது பொருத்தமான நடவடிக்கை அல்ல. அது மோசடி நடவடிக்கையாகவே அமையும். எனவே, நாம் மென்மேலும் படுகுழிக்குள் செல்வதா அல்லது மீள்வதா என்பது பற்றி சிந்திக்க வேண்டிய தருணம். ” – என்றார்.

அதேவேளை, ஐ.நா. பொதுச்செயலாளராக இருந்த பான்கீ மூன் இலங்கை வந்திருந்தபோது, 13 பிளஸ் எனக் கூறினர். பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் அந்த உறுதிமொழி வழங்கப்பட்டது. அரசியல் பலத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக சர்வதேசத்தைக்கூட ஏமாற்றியவர்கள்தான் இங்கு உள்ளனர் – எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles