உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூலம் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாதென நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் தேர்தல் கேட்கப்படுவதன் காரணம் அரசியல் தேவையைத் தவிர உண்மையான தேர்தலின் தேவை ஒன்றல்ல. நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட தேர்தல் நடத்தப்பட வேண்டுமென அமைச்சர் தெரிவித்துள்ளார். எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க அரசு தயாராக உள்ளது என்றார்.
புதிய கூட்டணியுடன் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், அதற்காக ஏற்கனவே 08 கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருவதாகவும், விரைவில் சின்னம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
