தேர்தல் ஆணைக்குழுவின் சில செயற்பாடுகள் பக்கச்சார்பானவையாக அமைந்துள்ளன என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும், தேர்தல் ஆணைக்குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாகவும், ஜனநாயக ரீதியாகவும் இயங்க வேண்டிய ஒரு அமைப்பாகும். எனினும், தேர்தல் ஆணைக்குழுவின் சில பக்கசார்பான செயற்பாடுகள் கவலையளிக்கின்றது எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் ஜீவன் தொண்டமான் மேலும் கூறியவை வருமாறு,
“உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இவ்வாறான கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதில் எந்த நன்மையும் இல்லை.
மேலும் வேட்புமனு தாக்கல் செய்தபோது சில சபைகளின் வேட்புமனுக்கல் நிராகரிக்கப்பட்டன. அச்சபைகளை நீதிமன்றத்தின் மூலம் மீள பெற்றுள்ளோம்., சில சபைகள் தொடர்பாக தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளோம்.
அத்தோடு மஸ்கெலியா உள்ளுராட்சி சபைக்கான இதொகாவின் வேட்பு ஏன் நிராகரிக்கப்பட்டது என்று தேர்தல் ஆணையாளரிடம் வினவியபோது , அங்கீகரிக்கப்பட்ட நபர் வேட்புமனு தாக்க செய்யாமல் , வேறு நபர் தாக்கல் செய்யப்பட்டமையினால் நிராகரிக்கபட்டது என பதிலளிக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பாக எங்களுடைய கட்சியிலே வேட்புமனு கையளிக்க அங்கீகரிக்கப்பட்ட நபருக்கு சுகயீனம் கராணமாக அவரின் மருத்துவ சான்றிதலை சமர்பித்து , அவருக்கு பதிலாக நியமித்திருந்த மாற்று நபருக்கு சமாதான நீதவானின் சான்றிதல் வழங்கியிருந்தும், எங்களுடைய கட்சியின் மஸ்கெலியா பிரதேச சபையின் வேட்புமனுவினை நிராகரித்து இருந்தனர். இது தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளரிடம் வினவியபோது அவர் அதற்கு எவ்வித பதிலும் வழங்கவில்லை.
மேலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தேர்தல் பிரசாரங்களின் போது உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெரும் எங்களுடைய (தே.ம.ச) கட்சியை சார்ந்த உறுப்பினர்களுக்கே நிதி ஓதுக்கீடு மேற்கொள்வேன் என்றும் மாற்று கட்சி உறுப்பினர்கள் தொடர்பாக யோசிப்போம் என்றும் கூறிவருகின்றார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.” – என்றார்.