‘தேர்தல் கூட்டத்துக்கு செல்லாத தோட்ட தொழிலாளர்களின் வீடுகள்மீது கல்வீச்சு தாக்குதல்!

கேகாலை தெஹிஓவிட்ட − மாஒயா பகுதியில் ஆளுங்கட்சியால் நடத்தப்பட்ட பிரச்சாரக்கூட்டத்தில் பங்கேற்காத தோட்டத்தொழிலாளர்களின் லயன்கு டியிருப்புகள்மீது தொடர்ச்சியாக கல்வீச்சு தாக்குதல் நடத்தப்படுவதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் 12 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளபோதிலும் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கடந்த 19 ஆம் திகதி முதல் இவ்வாறு கல்வீச்சு தாக்குதல் நடத்தப்படுவதாகவும், இதனால் தொழிலுக்குகூட செல்லாமல் தமக்கு வீட்டுக்குள் முடங்கியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், தமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தோட்ட தலைவர் ஒருவரின் வீட்டிலேயே பிரச்சாரக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், அதில் பங்கேற்காததாலேயே தொழிலாளர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles