” நாளை தேர்தலொன்று நடத்தப்பட்டால் நாம் தோல்வியடைவது உறுதி.” – என்று அறிவிப்பு விடுத்துள்ளார் ராஜபக்ச குடும்ப உறுப்பினரும், இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச.
பதுளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர், இவ்வாறானதொரு சர்ச்சைக்குரிய தகவலை வெளியிட்டார்.
” நாட்டு மக்களின் நலன் கருதியே இரசாயன உர பயன்பாட்டுக்கு தடை விதித்து, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டத்தை ஜனாதிபதி முன்னெடுத்தார். ‘வாக்கு வங்கி அரசியல்’ அவருக்கு முக்கியமில்லை. நாட்டின் நலனே முக்கியம். அதனால்தான் எதிர்ப்புகள் வலுத்தாலும் இப்படியொரு முடிவை எடுத்தார். எமது இந்த முடிவு மாறாது, முன்னோக்கி பயணிப்போம். அரசியலுக்காக, மக்கள் நஞ்சு உண்பதை அனுமதிக்கமுடியாது. ” – என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.