தேர்தல் முடிந்ததும் பிரதமர் பதவியில் மாற்றம் வருமா?

பொதுத்தேர்தலின் பின்னர் அமையும் புதிய அரசாங்கத்தில் பிரதமர் பதவியில் மாற்றம் வராது என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

25 பேரடங்கிய புதிய அமைச்சரவையில் பிரதமர் பதவி கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கே வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

அதேவேளை முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு சட்டரீதியாக கிடைக்க வேண்டிய விடயங்கள் வழங்கப்படும் எனவும், அதற்கு மேலதிகமாக எதுவும் வழங்கப்படமாட்டாது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles