தேர்தல் முறை சீர்திருத்த தெரிவுக்குழு தலைவர் தினேஷின் அறிக்கைக்கு பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு – மனோ கணேசன்

பாராளுமன்ற தேர்தல்முறையை விகிதாரசார முறையில் இருந்து கலப்பு முறைக்கு மாற்றும் சிபாரிசை முன்வைக்கும் தேர்தல் முறை சீர்திருத்த தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தணவின் ஒருதலைபட்ச இறுதி அறிக்கைக்குதெரிவுக்குழுவின் பெரும்பாலான அங்கத்தவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டோம். தெரிவுக்குழுவில் ஏற்படாத உடன்பாடுகளையும், உண்மைக்கு புறம்பான தகவல்களையும் உள்ளடக்கி இந்த இறுதி அறிக்கையை தெரிவுக்குழு தலைவர் சமர்பித்துள்ளார். இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படுமானால் அங்கும் அதை நாம் எதிர்ப்போம்.

 

இந்த போலி அறிக்கையை ஏற்க முடியாது என தெரிவுக்குழுவில்ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்புதமிழ் முற்போக்கு கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணிஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் அறிவித்தனர். கலப்பு முறையை ஆதரிக்க முடியாது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் (ஈபிடீபி) தமக்கு தெரிவித்துள்ளதாக குழு உறுப்பினர் ரவுப் ஹக்கீம் தெரிவுக்குழுவில் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரசும் கலப்பு முறைக்கு இணங்காது என நான் நம்புகிறேன். இந்நிலையில் மிக பெரும்பாலான கட்சிகளின் நிலைபபாடுகளுக்கு விரோதமாக இந்த இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன்  எம்பி தெரிவித்துள்ளார்.        

 

தேர்தல் முறை சீர்திருத்தங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தண  நேற்று தனது இறுதி அறிக்கையை குழுவில் சமர்பித்தார். இதையடுத்து பெரும்பாலான தெரிவுக்குழு உறுப்பினர்கள் இந்த இறுதி அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்தனர். இதுபற்றி மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,  

 

இந்த குழுவில் இடம் பெறாத அதேவேளை இடம் பெற்றும் நேற்றைய கூட்டத்தில் கலந்துக்கொள்ளாத கட்சி பிரதிநிதிகளின் ஆதரவையும் திரட்டி சுருக்கமான மாற்று நிலைப்பாட்டை எழுத்து மூலமாக தெரிவுக்குழுவுக்கும்பாராளுமன்றத்துக்கும் அறிவிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாற்று நிலைப்பாட்டு அறிக்கையை நண்பர் சுமந்திரன் எம்பி தயாரிப்பார். அதை அடிப்படையாக கொண்டு ஏனைய கட்சிகளின் ஆதரவையும் பெற்றுதெரிவுக்குழுவுக்கும்பாராளுமன்றத்துக்கும் தேர்தல் முறைமை தொடர்பான எமது நிலைப்பாடுகளை நாம் தெரிவிப்போம்.    

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles