” தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் அவசியமில்லை. நாட்டு மக்களுக்கு உண்ண உணவு வழங்க வேண்டும். அதுவே முக்கியம்.” என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
தனக்கு கட்சியென ஒன்று இல்லை எனவும், மக்கள் பக்கமே நிற்பதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், சுகாதார அமைச்சு போன்று ஒரு அமைச்சு வழங்கப்பட்டால் என்னால் முழுமையான பங்களிப்பை வழங்கக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
