உள்ளாட்சிசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான காமினி லொக்குகே தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
பாரிய கூட்டங்களை நடத்தாதபோதிலும், கிராம மட்டத்தில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.
