யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும், சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாகக் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இன்று மாலை 4 மணிக்குக் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
தையிட்டி விகாரைக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டம் பௌர்ணமி தினமாகிய நாளை புதன்கிழமை மாலை 6 மணி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்துக்குப் பல கட்சிகளும் பேதங்களின்றி ஆதரவு வழங்கியுள்ளன.
எனவே, தமிழ் மக்கள், தமிழ்க் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரையும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு வலுச்சேர்க்குமாறு தையிட்டி விகாரை காணி உரிமையாளர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.