தை பிறந்ததும் மமமு தலைமைப் பதவியில் மாற்றம்

(க.கிஷாந்தன்)

தை பிறந்த கையோடு மலையக மக்கள் முன்னணியில் மறுசீரமைப்பு நடவடிக்கை ஆரம்பமாகும் என்று  மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும், முன்னாள் அமைச்சருமான அமரர் பெ.சந்திரசேகரனின் 15ஆவது சிரார்த்த தினம், 01.01.2025 அன்று மதியம் 2 மணிக்கு, அட்டனில் மலையக மக்கள் முன்னணியின் காரியாலயத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னணியின் பிரதி தலைவரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆர்.ராஜாராம், முன்னணியின் செயலாளர் நாயகம் எஸ்.விஜயசந்திரன், மலையக தொழிலாளர் முன்னணியின் பொது செயலாளர் புஷ்பா விஷ்வநாதன், நிதி செயலாளர் தாளமுத்து சுதாகரன் உள்ளிட்ட ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது மேடையில் வைக்கப்பட்டிருந்த அமரர்.பெ.சந்திரசேகரனின் உருவப்படத்திற்கு முதல் மலர் மாலையை முன்னணியின் தலைவரும் எம்.பியுமான வே.இராதாகிருஷ்ணன் அணிவித்தார்.

இதனையடுத்து அதிதிகள் நினைவுச்சுடர் ஏற்றியதுடன், அங்கு கலந்து கொண்ட பொதுமக்களும் நினைவுச்சுடர்களை ஏற்றியமையும் குறிப்பிடதக்கது.  இந்நிகழ்வில் தலைமை தாங்கி உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மலையக மக்கள் முன்னணி தனித்துவமான கட்சியாகும். அக்கட்சி மறுசீரமைக்கப்பட வேண்டும் என மக்கள் தரப்பினரிடமிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கமைய விசேட குழு ஒன்றை அமைத்திருந்தோம்.

அந்த குழுவினால் முன்வைக்கப்படும் பரிந்துரைக்களுக்கமைய எதிர்வரும் பொங்கலுக்கு பின்னர் மறுசீரமைப்பு பணி இடம்பெறும்.

அத்துடன், உள்ளுராட்சி சபை தேர்தல் தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ளோம். அத்தேர்தலை மலையக மக்கள் முன்னணி தனித்து எதிர்கொள்ள வேண்டும் என கட்சி உறுப்பினர்கள் சிலர் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.

அந்த கோரிக்கைகள் குறித்தும் பரிசீலித்து வருகின்றோம். பாராளுமன்ற தேர்தலில் சில மாவட்டங்களில் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாது செய்யப்பட்டது. நவரெலியா மாவட்டததில் சிந்தித்து வாக்களித்திருந்தால் இன்னும் இரு தமிழ் பிரதிநிதிகளை தெரிவு செய்திருக்கலாம். எனவே, உள்ளுராட்சி சபை தேர்தலை உரிய வகையில் தமிழ் மக்கள் கையாள வேண்டும் என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles