தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு

நாட்டில் பரவலாக நிலவுகின்ற எரிபொருளுக்கான தட்டுப்பாடு இன்னும் ஒரு வாரத்துக்கு தொடரும் என்று எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று (03) மாலை ஆகும் போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 80சதவீதமான எரிபொருள் தீர்ந்துவிட்டது.

ஆனால் குறித்த நிலையங்களுக்கு எரிபொருளை மீள்நிரப்பு முறையான நடவடிக்கைகளை இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எடுக்கவில்லை என்று எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் குசும் சதநாயக்க தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles