தொடர் மழையால் வவுனியாவில் 120 குளங்கள் நிரம்பி வான் பாய்கின்றன

வவுனியாவில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக 120 இற்கும் மேற்ப்பட்ட குளங்கள் முழுக்கொள்ளவை எட்டி வான் பாய்வதுடன், 3 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்  பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. இதனால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நீர் நிறைந்து காணப்படுவதுடன், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில், வவுனியாக்குளம் தனது முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதுடன், வான் பாய ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, வவுனியா மாவட்டத்தின் 120 இற்கும் மேற்ப்பட்ட குளங்கள் தனது முழுக்கொள்ளளவை எட்டி மேலதிக நீர் வெளியேறி வருவதுடன், அநேகமான குளங்களில் 90 சதவீதமான அளவு நீர் நிறைந்துள்ளது.

இதுவரை செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள இராமயன்குளம், அருவித்தோட்டம் – நாகராயன்குளம் மற்றும் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள மடத்துவிளாங்குளம் ஆகியவற்றின் அணைக்கட்டுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றைச் சீர்செய்யும் பணிகளில் அதிகாரிகளின் ஆலோசனைகளுடன் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles